Wednesday, August 29, 2012

எவன் தலை போனாலும் எனக்கென்ன?...


அன்பு என்ற ஒன்றை அடிப்படையாக வைத்துத்தான்  இந்த உலகம் இயங்கிக்கொண்டு   இருக்கின்றது . நாம்  வாழும்      இந்த உலகத்தில்    இதுவரை எத்தனை விதமான அனுபவங்களைக் கண்டிருப்போம். அதற்க்குக்    காரணம் எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியான குணாதிசயம்    கொண்டவர்களாய்   என்றுமே    இருப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் எண்ணங்கள்  வளர்ந்துகொண்டேதான்   இருக்கும். ஆனாலும்   நாம் வாழும் இப் புவிதனில் எம்  வாழ்க்கை   என்பது   எப்போதும் பிறருக்கு நன்மை அளிக்கக் கூடியதாய்   அமைவதே சிறப்பாக்கும் .

சுயநலம் மிக்க எண்ணங்கள் உடையவர்களாய் நாம் இந்த வாழ்வைத் தொடரும்போது எம் மனம் எப்போதும் ஓர் குறுகிய வட்டத்தினுள் மட்டுமே பிரவேசிக்க முடியும்  என்பதையும் இதனால்    இந்தப் பிரபஞ்சத்தில்  உள்ள பல சந்தோசமான மன மகிழ்வைத் தரக்கூடிய உணர்வுகளை உறவுகளை என்றுமே    இழந்துதான் விடைபெறுகின்றோம் என்பதையும்  பலரும்  நினைவில் கொள்ள வேண்டும். விட்டுக் கொடுத்து   நடத்தல், வீணான யுத்தங்களை தவிர்த்தல். இயற்கையை ரசித்தல் .சக மனிதர்களின்   உணர்வுகளை மதித்து நடத்தல் போன்ற சிறப்பான குணாதிசயங்களை நாம் என்றுமே வளர்த்துக்கொள்ளல் என்பது மிக மிக அவசியமான ஒன்று .

                                 மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் அது என்னவென்றால் அது வேறொன்றும் இல்லை. மனிதர்களை மிருகங்களுடன் ஒப்பிடும்போது மனிதர்கள்  கொஞ்சம் நாகரீகம் தெரிந்தவர்கள் புரிந்துணர்வு அதிகம் உடையவர்கள் என்பதைத் தவிர இங்கே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு என்னதான் இருக்கின்றது!இன்றைய காலத்தில் இந்த ஒரு சில உயர்ந்த பண்பும் அரிதாகிக்கொண்டே வருகின்றது என்பதை இங்கு நாம் எல்லோரும் அறிவோம். நாகரீகம் என்ற     போர்வையில் சிதைந்து போகும் மனிதனின் பண்புகளைக் கண்டு    நாம் மனம் நோகத்தான் முடியுமே தவிர வேறு வழிகள் ஏதேனும் உண்டா  சொல்லுங்கள்?

பெரும் பெயரும் புகழும் பெறுவதற்க்கென்றே மனிதன் பொய்யிலும் புரட்டிலும் உழல்கின்றானே இவன் செயல்களைக் கண்டு நாம் அமைதி கொள்வது என்பதும்  எந்தவகையில் சாத்தியமாகும்?.. பதவி வெறியும் பொறாண்மையும் கொண்டு அலையும் மனிதன் அன்றாடம் செய்யும் தவறுகளால் இன்று உலகில் எத்தனை உயிர்கள் தினமும் பலியாகிக்கொண்டே இருக்கின்றது. இந்தப் பூமிப் பந்தில் அவதரித்த எம் இனத்தால் இன்று நடத்தப்படும் யுத்தங்களால் நாம் இழந்தவை எத்தனை எத்தனை !...மனிதன் மனிதனை சித்திரவதை செய்வதற்கென்றே எத்தனை விதமான கொடிய கண்டுபிடிப்புகளை மிகவும் சிரமப்பட்டு கண்டு பிடிக்கின்றான் !...ஆனால் மிருகங்கள் அவ்வாறு எதையும் கண்டு பிடித்ததுண்டா ?...தன்னை நெருங்கி வரும் மனித மிருகத்திடம் இருந்து எப்போதுமே தனக்கு ஒரு பாதுகாபிற்க்காகவே அவை எம்மைத் தீண்டுகின்றனவே தவிர எம்மைத் தேடி அலைகின்றனவா?....மனிதன் நினைக்கின்றான் உலகில் படைக்கப்பட்ட எல்லாமே முதலில் எனக்கு மட்டுமே சொந்தம் என்று.அதனால்தான் அவன் பிற உயிர்களை என்றுமே துச்சமாக மதித்து நடக்கின்றான் .ஆனாலும் நமது மூதாதையர் யார் என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம் .

உருவத்தால் வேறுபட்டிருந்தாலும் கொஞ்சமேனும் உள்ளத்தால் நாம் வேறுபட்டு உள்ளோமா?......அடிக்கடி கொப்புக்கு  கொப்பு  தாவுவது எம் இனத்துக்கே உள்ள சிறப்புக் குணாதிசயம் .இது ஒன்றே போதும் எம்மை நாமே 
இனம் கண்டு கொள்வதற்கு  .  பணமோ பதவியோ வாழ்வில் எம்மை என்றுமே உயரிய இடத்திற்கு கொண்டு செல்லாது .எம் மனம் எம் குணம் எப்போதுமே தூய்மையாக இருத்தல் வேண்டும். பிறரைப் பார்த்து நையாண்டி செய்வது எப்போதும் தனக்குக் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று நினைப்பது இதுபோன்ற    தீய   ஒழுக்கங்களால்  மனித    மனங்களில் ஒரு தேவை அற்ற வீண் விகார புத்தி தோன்றுவதால் வரும் துயர் என்பதை கணக்கில் இட்டால் என்றுமே தாங்காது. ஆக ஒரு மனிதன் இன்னொரு மனிதனிற்கு தன்னால் ஆகக் கூடிய எந்த ஒரு உதவியையும் செய்ய முடியாது போனாலும் கவலை இல்லை. பிறருக்கு  தீங்கு செய்ய நினைப்பதைக் கைவிட்டாலே அவன் புனிதனாக மண்ணில் மதிக்கப்படுவான். வாழ்வில்  நாம் அனைவரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் இங்கு வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். எம் வாழ்க்கை என்பது எப்போதுமே நாம் திட்டமிட்டபடி நிகழ்வதில்லை. பல சமயங்களில் பெருத்த தோல்வியும் அவமானமும் எம்மைத் தேடி வரும் சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள எம் முயற்சிகள் யாவும் நேர்வழியைத்தான் பின்பற்ற வேண்டுமே தவிர தவறான பாதையில் பிறரைப் பாதிக்கும் வகையில் என்றுமே நடந்துகொள்ளக் கூடாது என்பதே எனது ஆணித்தனமான கருத்து .
                                
ஆயிரம் முறை முயற்சித்து ஒரு முறை கட்டிய வீடு  ஆயினும்     என்ன!..
போகி வந்ததும் துடைத்தெறியப்படும் வெறும் தூசி என்றே நினைப்பதால் 
இதன் கனவுகள்    கூட    சிதைந்து    போகும்.  ஆனாலும்  முயற்சி     மட்டும் 
மேலும் மேலும் தொடரும்   புதிய வெற்றிப்படிகளை நோக்கி !!!..................... 

17 comments:

 1. வாழ்க்கை என்பது எப்போதும் பிறருக்கு நன்மை அளிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும் என்று ஆரம்பித்து, தளராத முயற்சி வெற்றியின் படிக்கட்டுகள்... என அருமையான பல கருத்துக்கள்...

  அருமை... வாழ்த்துக்கள்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் சகோ .

   Delete
 2. அருமையான கருத்துக்களை கொண்ட பதிவு!


  BTW.., டெம்ப்ளேட் பின்னணி நிறத்தில் கவனம் கொள்ளுங்கள் சகோ, சைடு பார் விட்ஜெட்டில் இருப்பவை ஒன்றுமே தெரியவில்லை!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ நல்ல தகவலைத் தந்தமைக்கு .

   Delete
 3. தன்னம்பிக்கை நிறைந்த எழுத்துகள் அழகிய நடையில் அருமை தோழி

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி என்னை ஊக்கிவிற்கும் அழகிய
   கருத்துப் பகிர்வுக்கு .

   Delete
 4. சுயநலமில்லாத அன்பைப் பற்றி அழகான உரைநடையில் கொடுத்துள்ளீர்கள் ! ஆனால், அப்படி இருப்பவர்கள் " இளிச்சவாயர்கள் " என்று முத்திரை குத்தப்படுகிறார்களே ! உதாரணத்திற்கு, வகுப்பறையில் " மிரட்டும் " " அடிக்கும் " ஆசிரியருக்குத் தான் மாணவர்கள் மரியாதை கொடுக்கிறார்கள். காலம் அப்படி இருக்கிறது ! என்ன செய்ய ???

  ReplyDelete
  Replies
  1. இந்த நிலை மாற வேண்டும் சகோதரரே !..தவறு என்றும்
   தெரிந்து நாம் பின்பற்றும் வழிகளை சரி செய்வதன் மூலம்
   இக்குறைகளும் சரி செய்யப்படலாம் அல்லவா ???...!
   மிக்க நன்றி அருமையான கருத்துப் பகிர்வுக்கு .

   Delete
 5. தொடருங்கள் பணி தொடர வாழ்த்து சகோதரி.
  வேதா. இலங்காதிலகம்.
  http://kovaikkavi.wordpress.com

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .

   Delete
 6. மனிதர்களை மிருகங்களுடன் ஒப்பிடும்போது மனிதர்கள் கொஞ்சம் நாகரீகம் தெரிந்தவர்கள் புரிந்துணர்வு அதிகம் உடையவர்கள் என்பதைத் தவிர இங்கே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு என்னதான் இருக்கின்றது!இன்றைய காலத்தில் இந்த ஒரு சில உயர்ந்த பண்பும் அரிதாகிக்கொண்டே வருகின்றது......நீங்களே நீதியும் சொல்லி முடித்துவிட்டீர்கள் அன்பு.வேறென்ன சொல்ல இருக்கு.புரிந்து செயல்படுவோம் !

  ReplyDelete
 7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

  வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் ,

   Delete
 8. உங்கள் தளத்தை வலைசரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்
  http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_31.html
  என் தளம்
  http://kovaimusaraladevi.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. இன்றைய தளத்தில் என் தளத்தையும் அறிமுகம்
   செய்து வைத்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .
   அத்துடன் ஏனைய அறிமுகங்களுக்கும் என் இனிய
   வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

   Delete
 9. வணக்கம் நண்பரே!

  உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

  தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 10. வெகு அழகிய நடையில் தன்னம்பிக்கை தரும் ஆக்கமாகக் கொடுத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. வலைச்சர அறிமுகத்திற்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .