Wednesday, November 20, 2013

கார்த்திகைப் பூக்களின் கனவும் நீதானே

நாற்று நடும் கைகள் எங்கே ?..
நல்ல தமிழ்ப் புலமை எங்கே ?...
பூட்டி வைத்த அறையினுள்ளே 
புதைந்து கிடக்கும் சுதந்திரமே !!!!...

ஒற்றையடிப் பாதையிலே 
ஒருவர் பின்னல் ஒருவர் செல்லக் 
கற்றுத் தந்த பாடமெல்லாம் 
களமிறங்கப் பார்க்குதுன்னால் 

வட்டமிடும் பருந்திற்கும்  
வழி காட்டும் நரிகளுக்கும் 
அச்சமின்றி நிமிர்ந்த தலை 
அடங்கிடுமோ எந்நாளும் ?...

பொட்டு வைத்து வழியனுப்பும் 
பொங்கு தமிழ்க் குலத்தின் நிழல் 
கட்டுப் பாட்டை மீறும் முன்னால் 
காத்து விடு சுதந்திரமே ....

பட்டுப் போன மரத்தடியில் 
பல மரங்கள் தழைத்திருக்கும் 
அவைக்கும் உச்ச நீதி வழங்கிடவே 
ஓடி வா நீ சுதந்திரமே .....  ............                                                    

4 comments:

  1. //பொட்டு வைத்து வழியனுப்பும்
    பொங்கு தமிழ்க் குலத்தின் நிழல்
    கட்டுப் பாட்டை மீறும் முன்னால் //

    வருத்தங்களைச் சொல்லிய விதம் வெகு அருமை.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள் ஐயா .

    ReplyDelete
  3. சொன்னவிதம் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அருமையான கருத்து
    பட்டுப்போன மரத்தடியில் பல மரங்கள்
    தழைத்திருக்கும்

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .