தாயைப் போல அன்பு செலுத்தக்கூடிய நல்ல இதயங்களைத் தேடித் தேடி ஒரு சிறு பறவையின் மன வெளிகள் மீண்டும் இங்கே திறந்து வைக்கப் படுகிறது. அன்பு தான் வாழ்வின் இன்ப ஊற்று இதை அறியாதவர்கள் வாழ்வே வெறும் கூற்று .இன்று போய் நாளையும் வருவேன் என்று கூறி எங்கோ பரந்து விரிந்த
தேசத்தில் ,ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகள் உங்களுடன் உறவாடி மகிழக் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்திற்காக ஏங்கித் தவிக்கும் இந்தப் பிஞ்சு மனத்தையும் கொஞ்சம் மகிழ்விக்க வாருங்கள் உறவுகளே உங்கள் வரவுக்காகக் காத்திருக்கின்றேன் !!
தேசத்தில் ,ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்துகொண்டிருக்கும் உறவுகள் உங்களுடன் உறவாடி மகிழக் கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்திற்காக ஏங்கித் தவிக்கும் இந்தப் பிஞ்சு மனத்தையும் கொஞ்சம் மகிழ்விக்க வாருங்கள் உறவுகளே உங்கள் வரவுக்காகக் காத்திருக்கின்றேன் !!
பொன்னும் பொருளும் கல்வியும் புகழின் உச்சிக்கே எடுத்துச் சென்றாலும் இன்னும் வேண்டும் வேண்டும் என்றே இதயம் கேட்பது என்னமோ அன்பைத்தான் .ஆதலால் சிரித்துப் பேசுவோம் சிந்தை மகிழ்ந்திட கதைகள் சொலுவோம் கவலைகள் மறந்திட .இனி இருக்கும் காலம் முழுவதும் இவளும் உங்கள் சொந்தமென்றே அரவணைத்துச் செல்லுங்கள் .இன்று அறிமுகமானவள் என்றோ ஒரு நாள் உங்களையும் அறிமுகப் படுத்துவாள் அன்பு உள்ளம் நினைத்தால் எதுவும் இங்கே சாத்தியமாகும் :)
உரை முடிந்தது விருந்துண்ணலாம் வாருங்கள்
கதை ,கவிதை ,அறிமுகம் ,அனுபவம்
தொடர்ந்தும் வாருங்கள் விருந்து பிடித்திருந்தால் என் மனமும் உங்கள் மனமும் இதனால் மகிழ்ந்திருக்கும் .இன்றைய வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் சந்திப்போம் .
நன்றி
விருந்திற்காகக் காத்திருக்கின்றோம்
ReplyDeleteமங்களகரமான முதல் வருகைக்கு நன்றி !
Delete
ReplyDeleteஅன்பு உள்ளம் உங்களை வரவேற்கின்றது
இனிய வாழ்த்துகள்..!
மங்களகரமான இரண்டாவது வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி !
Delete//இனி இருக்கும் காலம் முழுவதும் இவளும் உங்கள் சொந்தமென்றே அரவணைத்துச் செல்லுங்கள் .இன்று அறிமுகமானவள் என்றோ ஒரு நாள் உங்களையும் அறிமுகப் படுத்துவாள் //
ReplyDeleteஅழகான அசத்தலான வரிகள். மற்றொரு சொந்தம் என்னை மிகவும் மகிழ்வளிக்கிறது. ;)
//அன்பு உள்ளம் நினைத்தால் எதுவும் இங்கே சாத்தியமாகும் :) //
சபாஷ் ! ;))))))
பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.
mika arumai
ReplyDelete