Saturday, August 18, 2012

இது அன்பு உள்ளம் விடும் தூது.

எண்ணங்களில் பல வர்ணங்கள்  கலந்து
நல் இதயங்கள் மகிழ புது கதைகள்தான் தந்து
உறவென்னும் பாலம் இணைத்திட வந்தேன்
தமிழோடும் தமிழ் பேசும் நல் உறவுகளோடும்

இனி இந்த இல்லம் இது உங்கள் உள்ளம்
மனம்போல (நற்) கருத்து மலரட்டும் என்றும்
புதிய வாசல் திறந்து வைத்தேன் அங்கே
பூவை மட்டும் மலர விட்டேன் !!!............



இனிய நட்பு தொடரட்டுமே எம்
இதயம் அதனால் மகிழட்டுமே!......
வருக வருக உறவுகளே உங்கள்
வரவுக்காக காத்திருக்கிறேன்!!........

5 comments:

  1. தங்கள் அன்பு உள்ளத்துள்ளும்
    இல்லத்துள்ளும் முதலாவதாக
    அடிவைத்து நுழைவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்
    தங்கள் பதிவுகள் ஆயிரமாயிரமாய்
    பல்கிப்பெருக பதிவுலகில் பெரும்
    சாதனைகள் புரிய மனமாற வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா தங்கள் முதல் வரவும் வாழ்த்தும்
    கண்டு மனம் குளிர்கிறது .இந்த ஆசி என்றும் தொடரட்டும்
    அன்பு உள்ளம் உங்களை மனதார வாழ்த்தி வணக்குகின்றது .

    ReplyDelete
  3. இன்று அன்பு உள்ளத்தை கண்டு மனமகிழ்ந்தேன்.
    தங்கள் வரவு நல்வரவாகுகே.
    சாதனை பயணம் தொடர வாழ்த்துக்கள் தோழி.

    ReplyDelete
  4. அன்பைத் தேடும் ஒரு உள்ளம்.....எல்லாருமே ஒரு சமவெளியில் !

    ReplyDelete
  5. அருமையான மகிழ்ச்சியளிக்கும் தூதுக்கு நன்றிகள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .