Sunday, August 26, 2012

வசந்த மண்டபம்!...


இசை பாடும் குயிலுக்கு 
வசந்த மண்டபம் காடுதானடா!...
இதமான காற்றுக்கும்
வசந்த மண்டபம் காடுதானடா!...

அசைகின்ற பூமிக்கு 
வசந்த மண்டபம் காடுதானடா!...
அகிலத்தில் உயிர்களுக்கே  
வசந்த மண்டபம் காடுதானடா!...



புது வீடு கட்டிக் கட்டி 
ஏசி போட்டாச்சு எதுவும் 
புரியாமல் காடுகளை 
தினமும் வெட்டி விட்டாச்சு!!....

மணல் அள்ளிக் கடற்பரப்பை 
அகட்டி விட்டாச்சு !!!!..............
மழை நீரின் வருகைக்கும் 
முற்றுப் புள்ளி வச்சாச்சு!!.....



தினந்தோறும் குண்டு தள்ளி                                               
 நம் நிலம் அதிர்ந்தாச்சு!!!......
தீ வந்து எமைத் தாக்க
நல் வழி வகுத்தாச்சு!!!....

உலகத்தைக் கைக்குள்ளே 
கொண்டு வந்தாச்சு இனி 
உயிர் வாழ வழியின்றி 
பெரும் குழி பறிச்சாச்சு!....


  
அரிதான உயிரினகள் பல 
அழிஞ்சு போயாச்சு!!.........
நம்ம அடையாள சின்னங்களும்
துலைந்து போயாச்சு!....

இடர் வந்து நெஞ்சுக்குள்ளே 
ஓட்டிக்கொண்டாச்சு!...........
அதிலும் உலகத்தின் அழிவுக்கும் 
இங்கு தேதி குறிச்சாச்சு!!!....



இது நடந்தாலும் நடக்கலாம்  
இந்நாளிலே எதற்கும் நாம் 
இருக்கின்ற காலத்தைப் 
பொன்போல் எண்ணி 

மனித வளம் காக்கும் செல்வம் 
அதைக்(கொச்சம்) காத்து நிற்ப்போமே 
எதற்கும் மறக்காமல் அன்போடு 
நாம் மனிதர்களாய் வாழ்ந்திடுவோமே!....

டிஸ்கி:என் தளத்தின் வடிவமைப்பு .
                இது ஒரு காடு நீங்கள் கருத்திடும் 
                இடம்கூட அந்த மரத்தின்
                உடல் மீதுதான்!!!................ 
                 இந்த புதிய வசந்த மண்டபத்திற்கு உங்களை 
                 வருக வருக என்று வரவேற்கின்றேன் அன்பு 
                 உறவுகளே 
                                            
                                 

12 comments:

  1. அருமையான கருத்துக்கள்... கருத்திக்கேற்ற படங்கள்...

    வரிகள் - அனைவரும் சிந்திங்க வேண்டும்...

    Follower ஆகி விட்டேன்... இனி தொடர்வேன்...

    தளத்தின் தலைப்பு மிகவும் பிடித்துள்ளது... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ மிக்க நன்றி தங்கள் வரவிற்கும்
      மனம் மகிழும் பாராட்டிற்கும் .வாழ்த்திற்கும் .

      Delete
  2. புதிய வசந்த மண்டபத்திற்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ மிக்க நன்றி தங்கள் வரவிற்கும்
      மனம் மகிழும் பாராட்டிற்கும் .வாழ்த்திற்கும் .

      Delete
  3. மகேந்திரனின் வசந்த மண்டபம்.
    இது அன்புள்ளத்தின் ....
    ஓரே ஆளா? என்ன குளப்பமப்பா?
    தெளிய வைக்கிறீங்களா?

    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா .தங்கள் வருகைக்கு மிக்க
      நன்றி .போகப் போக தெரிந்துகொள்ளுங்கள் .
      குழப்பம் வேண்டாமே :)

      Delete
  4. இயற்கையைப் போற்றுவதற்காகவே உங்களுக்கு ஒரு வணக்கம். அதை எழுத்தில் அழகாக வடித்ததற்கு ஒரு தனி வந்தனம்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் உங்கள் வருகையும் கருத்தும்
      கண்டு மகிழ்ந்தேன் !...மிக்க நன்றி வரவிற்கும்
      இனிய கருத்திற்கும்

      Delete
  5. அருமையாகவுள்ளது. பகிர்ந்தமைக்கு நன்றி. படங்கள் அருமை. தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி !....

      Delete
  6. இயற்கையை அழித்துத்தான் நான் நாகரீகமாய் வாழ்கிறோம்.பங்கு நம் எல்லோருக்குமேதான்.சில விஷயங்கள் எம்மைக் கட்டியாளுகின்றன.மாற்றிக்கொள்ள இனிக் கஸ்டம்.பதிவுகளோடு தொடருங்கள் அன்பு !

    ReplyDelete
  7. அன்பு உள்ளத்தின் புதிய வசந்த மண்டபத்திற்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்!

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .