Sunday, August 19, 2012

அம்மா இதுதான் அன்பின் இல்லம்!.. .அம்மா கருவறையில் எம்மை சுமந்த கணமே தன்னை அன்பெனும் சிறை அறைக்குள்
பூட்டிக் கொள்பவள். அகிலத்தில் இவள்போன்று அன்பு செய்ய யாருண்டுசொல்லுங்கள்?.
வறுமையிலும்   எளிமையான   தோற்றம் உடையவள் .பொறுமைக்கு   ஆதார  சக்தியே
இவள்தான். சிறு  பிள்ளைத் தனமாய் நாம் கொடுக்கும் கஸ்ரங்கள்  நஸ்ரங்கள் எல்லாமே
இவளின்   கண்களுக்கு    வேதனையைக்   கொடுக்கும்  அல்லால்  கோவத்தை    உண்டு
பண்ணாதே!..  .அடுக்களையில்   அடைந்து    கிடந்து   எம்மை எல்லாம் மனம் குளிர வாழ
வைப்பவளும் அவள்தானே. ஈரேழு ஜென்மங்கள்    ஆனாலும்   எமை  ஈன்று   எடுத்தவள்
கடன் தீர்க்கவா முடியும்!..அப்படி இருக்கும் போது எம்மைச் சுமந்தவளை எதிர் காலத்தில்
நாம் சுமப்பதுதானே   மனிதத் தன்மை!..வரம்    கொடுக்கும்   சாமிக்குக்   கூட    காணிக்கை
கொடுத்து    பழக்கப்   பட்டவர்கள்   நாங்கள் .எம்மையே தன்  வரமாக   நினைத்து  வாழ்ந்த  
இந்த    சாமிக்கு   நாம்   செய்ய   வேண்டிய பணிவிடைகள்  ஏராளம் இருக்கின்றதே. அப்படி  
இருக்க  ஒரு வேளை   உணவு   கொடுக்கவும்  ஒதுங்க   ஒரு   இடம்   கொடுக்கவும்  சினம்கொள்ளலாமா?....  தன்   கருவறையில்  இடம் கொடுத்தவள்   தாய்     அன்று. இன்று   தன்
மகன்      தனக்கு    இல்லை  என்று  தெரிந்த    பின்னால்  வரும்துயர்  அதை    நாம்
அறிந்திருக்க  வேண்டாமா!... வந்த  பெண்ணை  வாழவைக்க    நினைக்கும்  ஆண் மகன்
தன்னை     பெற்று    வளர்த்தவளை    எந்த   ஆதரவும் இன்றி தவிக்க விடலாமா?.. கட்டிய
மனைவிக்கு கோவம் வந்தால் அவளுக்கு அவள் தாய் வீடு உள்ளது அது போல் எம்மைப்
பெற்றெடுத்தவள் அவள்  எங்கு   போவாள் ?...மகன் மருமகன்   ஆகிக்   காட்டும்  அன்பில்
சிறு   பங்கேனும்  தன் தாய்  மீது    காட்ட மறந்தால்   பெற்றவளுக்கு    இதை   விட பெரிய
தண்டனை என்னதான் இருக்க முடியும்?..எம் வசந்த கால கனவுகள் வானில் சிறகடித்துப்
பறக்கலாம்.ஆனாலும்   கடந்த காலம்  எல்லாமே கண்ணை விட்டு மறைவதுதான் தவறு.
ஒரு   பிள்ளை   பெற்றெடுத்து  வளர்ப்பதற்குள்  அவர்களைப்  பெற்றவர்கள்  படும் துன்பம்
என்பது    அளவிட   முடியாத   ஒன்று....   அதனிலும்   கொடியது  நாம்   இன்று   அவர்களை
முதியோர்   இல்லத்திலும்  தன்னந்  தனிமையிலும்  விட்டு     விட்டுச்       செல்லுதல்தான் .
                           மிகவும் வேதனையான ஒரு சம்பவம் கடந்த சில நாட்களின்முன்   நான் ஓர்
முதியோர்   இல்லம்    சென்றிருந்தேன் . எனக்குத் தெரிந்தவர்கள்   அங்கு  இருக்கின்றனர்
என்று அறிந்து அவர்களைப் பார்ப்பதற்காக .பாவம் ஒரு    எண்பத்தைந்து வயது    மதிக்கத்
தக்க   அம்மா    ஒருவரை    நான்  அங்கு சந்திக்க நேர்ந்தது   கிட்டத் தட்ட    நான்கு
வருடங்களாக    அவர்     தனிமையில்   ஒரு    அறையில்    விடப்பட்ட      நிலையில் புத்தி
சுவாதீனம் அற்று  இருப்பதை  அறிந்தேன், அங்கு சென்ற எனக்கு ஓர் அதிர்ச்சியான தகவல்
கிட்டியது. இது ஒரு ஐரோப்பா  நாடு  ஒன்றில்   உள்ள வயோதிபர்   இல்லம் .   இங்கு   பணி

புரிபவர்கள் பெரும்பாலும்   வெள்ளைக்காரர்கள்தான் .அந்த   அம்மாவிற்கு அங்கு சென்று
பார்க்க பிள்ளைகள்   இருவர்  இருந்தும்   அவர்கள்   எப்போதோ    ஓரிரு   தடவைகள்   வந்து
போனதாகவும்    அந்த      அம்மாவைக்     கவனிக்க   யாரும்   இல்லை    என்றும்    மிகவும்
                          வேதனையுடன்   சொன்னார்கள் .  தாங்கள்    அங்கு    கொடுக்கும்    உணவுகூட
(வெள்ளைக்காரரின்  சாப்பாடு அது )அவர் விரும்பி சாப்பிடு  வதில்லை  என்றும்  அவருக்கு
எமது நாட்டு   சாப்பாடுதான்   மிகவும் பிடிக்கும்    என்றும்   சொன்னார்கள்   அதைக்     கேட்டு
நானும்  அவருக்கு  அந்தசாப்பாட்டை  கொண்டு  வந்து  கொடுக்கலாமா?. என்று கேட்டதற்கு
மிகவும் வேதனையுடன்  சொன்னார்கள் அப்படி  கொடுத்தால் அந்த புண்ணியம் உங்களுக்கு
எப்போதும்  கிட்டும் என்று!!!.............
இதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது .முன்
பின் தெரியாத வெள்ளைக்காரார்கள் கூட அந்தத் தாயின் நிலை கண்டு
பரிதாபப் படும்போது எம்மிலும் சிலர் இப்படியும் இருக்கின்றார்களே
என்று .இப்போது சொல்லுங்கள் தாயென்று வந்தால் எந்த  இனத்திற்கும்
தனிப் பாசம் பொங்கி வழியும் இல்லையா?...இதற்க்கு மேலும் நாம்
எதையாவது கற்றுக் கொள்ள நினைத்தால் இந்த ஐந்தறிவு யீவன்களே
போதும் .எங்கள் அகக் கண்களைத் திறந்து விட .பெற்ற தாய் தந்தையை
பேணிப் பாது காக்காத பிள்ளைகள் எந்தக் காலத்திலும் மகிழ்ச்சியாக
வாழ இயலாது என்பதுதான் என் எண்ணக் கருத்து.
 .
டிஸ்கி :இந்த ஆக்கம் பற்றிய உங்கள் கருத்துக்களையும் என்னோடு பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள் அன்பு உறவுகளே .
                                                   மிக்க நன்றி வரவுக்கு .

8 comments:

 1. மனதை வலிக்க செய்கிறது வரிகளில் தெறிக்கும் உண்மை ..........இந்நிலை நீடிக்காமல் இருக்க பிரார்த்திக்கிறேன் இறைவனை .........புதிய தளம் ஆக்கபூர்வமான விசன்களோடு வலம் வாருங்கள் தொடருகிறோம்

  ReplyDelete
 2. மிக்க நன்றி தோழி தங்கள் வரவிற்கும் இனிய நற் கருத்திற்கும் .
  இந்த உறவு தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 3. மிகவும் வலி கூடிய சம்பவந்தை பகிர்ந்துள்ளீர்கள்..மனது கணக்கிறது..

  தாயின் பாதத்தின் கீழ் சுவர்க்கமுண்டு என சொல்லக் கேட்டுள்ளேன்... சுவர்க்கம் செல்ல விரும்புபவர்கள் தாயைப் போற்றினாலே போதும்

  ReplyDelete
 4. அன்பு இல்லத்தின் ஆதாரமே தாய்தானே
  அவர் துயர்படும் இல்லம் எப்படி இனிமையானதாக
  இருக்கக்கூடும்.முதல் பதிவே தங்கள் பதிவில்
  பகிர்ந்து கொள்ள நிறைய அவசியமான
  விஷயங்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடிந்தது
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. வாழ்த்துக்கள் உங்கள் வரவு நல் வரவாகட்டும் .

  ReplyDelete
 6. தாயை சிறந்த கோயில் இல்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இப்படி புகழப்பட்ட இந்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் முதியோர் இல்லங்கள் பெருகி கொண்டு தான் வருகிறது. வேதனையான விஷயம். அன்பின் இல்லம் அன்பான இல்லமாக தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வயதுபோனால்.....முன்னெச்சரிக்கை தரும் பதிவென்றும் சொல்லலாம் !

  ReplyDelete
 8. வேதனைகளையும் சொல்லியுள்ளீர்கள். அன்பு இல்லத்தின் ஆதாரமே தாய்தானே!

  தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .