Monday, August 27, 2012

காலத்தால் அழியாத எழுத்துக்கள்!...


சிப்பிக்குள் முத்தைப்போல் முடங்கிக் கிடக்கும்    நினைவுகளை    மெருகூட்டி
அழகிய சிந்தனையுடன் பிறரும் அறிந்து பயன்பெறும் வகையில் எழுதும் ஆக்கம் என்பதே சிறந்த ஆக்கம் என்று கருதக்கூடியவை.இந்தமாதிரி ஆக்கங்களை எப்போதும் எழுதுவதற்கு  நாம் நிறைய விசயங்களைத்  தெரிந்து 
வைத்துக்கொள்ள வேண்டும் .இதற்காகவே பல  அரிய   நூல்களைத் தேடி தினமும்   வாசித்தல் என்பது எமக்கு மிகவும் சிறப்பானதொரு பயனை  அளிக்கும் .அன்றாடம் எம்மைச் சுற்றி நிகழும் நல்ல   தகவல்களை  சேகரித்து 
அதன் அடிப்படையில் நாம்  எம்  கற்பனை  வளம்கொண்டும் படைப்புகளை பிறர் மனம் பாதிக்காத வகையில் எழுதிக்கொள்ளலாம் .  


எழுத்துக்கள் என்பது இந்த உலகத்தின் கண் போன்றது .பிறர் கொடுக்கும்  தகவல்களை அடிப்படையாகக்  கொண்டுதான் நாம் இங்கு எம் தேவைகளை பூர்த்தி செய்யவும் அறிவை வளர்த்துக் கொள்ளவும் அன்றாட வாழ்வில் முயற்சிக்கின்றோம். அந்த வகையில் மனித நேயம் மிக்க நூல்கள்  பல   மகான்களால் எழுதப்பட்டு அதன் பயன்பாட் டினால்  இந்த  உலகம் மிகப் பெரிய நன்மைகளை இதுவரை அடைந்து கொண்டிருக்கின்றது   என்பது இங்கு 
நாம் அனைவரும் அறிந்த ஒரு     உண்மை!...அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு அலசி ஆராய்ந்து   மிகத் துல்லியமாக  எந்த ஒரு ஆக்கத்தையும் மக்கள் மனதில் ஆழமாய்  பதியும் வண்ணம்   எழுதி வைத்தார்கள். இன்றும் சிலர் இதுபோன்ற ஆக்கங்களைப் பின்பற்றி அ தன் சுவடுகள் அழியாத வண்ணம் எழுதி வருவதை நாம் அறிவோம் .அவரவர் அறிவுக்கு எட்டிய நல்ல தகவல்களை பகிர்ந்துகொள்ளவே நாமும் முயற்சிக்க வேண்டும் அதைவிட்டு
உண்மைக்கு முரணான தகவல்களையோ அல்லது மதங்களை இழிவுபடுத்தி எழுதும் ஆக்கங்களையோ தவிர்துக்கொள்ளல் வேண்டும் .கூரிய வாள்களை விடவும் கூர்மையானது எழுதுகோல் அதனால்  .இதனை   பயன்படுத்தும் நாமும் முதலில் எம் சிந்தனைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். கவிதை என்பது முழுக்க முழுக்க கற்பனைகளை மையமாகக் கொண்டது. பல கதைகளும் அவ்வாறுதான். ஆனால் செய்திகள் விமர்சனங்கள்  அப்படி அல்ல.நோயுற்று இருக்கும் ஒருவரை இறந்துவிட்டார் என்று எழுதுவது தனி மனித உரிமை மீறல் .இது பலரையும் பாதிக்கக்கூடிய விசயம். எமக்குத்  தெரியாத ஒரு செய்தியை முழுமையாக ஆராயாமல் அதன் வெளித் தோற்றத்தை வைத்து திரிவுபடுத்தி எழுதுதல் என்பதும் மனிதாபிமானம் அற்ற செயலாகும். நாம் எழுதுகின்றோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம் என்று நினைப்பது முற்றிலும் தவறான ஒரு விடயம். நல்ல ஆக்கங்கள் எப்போதும் வாசகர் நெஞ்சங்களை விட்டகலாது என்பதற்கு இந்தக்  கடிதம்


                                      கவிஞர் .பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்
ஒரு நல்ல உதாரணமாக என் மனக் கண்ணில் பட்டது. அதனால்தான்  இன்று  இந்த ஆக்கத்தை எழுதவேண்டும் என்று எண்ணம் கொண்டேன் வலைத்தளத்தில் எழுதிவரும் நாமும் எம் ஆக்கங்களை    கொஞ்சம் ஆய்வு செய்து தரமான ஆக்கங்களை வெளியிடுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்பதே என் எண்ணக் கருத்தாகும் .
                                             
                                                   
அறிவெனும் சுடர் மிளிர
அன்பெனும் மை திரட்டி
தெளிவுற நற் கருத்தை
சிந்தனைக்கு அடி பணிந்து

அறநெறி தனில் நின்று பிறர்
அகம் அது குளிர்ந்திடவே
தினம் ஒரு கவி பாடி எம்
செந்தமிழதை வளர்த்திட வாரீர்!!!....


                                            

10 comments:

  1. சிறப்பான கருத்து....

    தொடர வாழ்த்துக்கள்... மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .

      Delete


  2. அன்பு உள்ளம் மட்டுமல்ல, நல் அறிவு உள்ளமாகவும் திகழ்கிறது தங்கள் வலை

    வாழ்க! வளர்க!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா தங்கள் வரவிற்கும் இனிய நல்
      வாழ்த்திற்கும் .

      Delete
  3. எழுத்துக்களின் வீரியம் வேறெதிலும் இல்லை.ஆழந்து யோசித்தெழுதிய பதிவு !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி தங்கள் வரவிற்கும் இனிய நற்
      கருத்திற்கும் .

      Delete
  4. இந்த விசயத்தில் உங்கள் சிந்தனையும் என் சிந்தனையும் ஒன்று போல் உள்ளது!

    எழுதிக்கொண்டிருப்பவர்கள் சிறிதளவேணும் சிந்தித்தால் நல்லது!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் இனிய நற்
      கருத்திற்கும் .

      Delete
  5. அருமையான கருத்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    ReplyDelete
  6. அருமையான ஆக்கம். கவிஞர் .பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் கடிதத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது மேலும் சிறப்பாக உள்ளது,

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .