Saturday, September 15, 2012

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சே!!!.....

கண்ணன் ஒரு சுட்டிப் பயல் .சின்ன வயதில் இருந்தே இப்படித்தான் எதிலும் ஒரு வேகம் .தான் நினைத்ததை சட்டென செய்து முடித்து விடுவான் .அது சில சமயங்களில் வியப்பாகவும் சில சமயங்களில் விபரீதமாகவும் இருக்கும் ஆனாலும் சின்னப் பிள்ளை அதிலும் அதிக செல்லமாய் வளர்ந்த பிள்ளை எனவே அவனுடைய பெற்றோர்கள் அவனை கண்டிப்பது மிக மிகக் குறைவு அதனால் பாடசாலையிலும் அவன் குடியிருக்கும் தெருவிலும்
எப்போதுமே ஒரு வழக்கு வந்தபடிதான் இருக்கும் .பதிலுக்கு அவனுடைய பெற்றோரும் அவனை காப்பாற்றுவதாக நினைத்து பிறர் மீது குற்றம் சொல்லியே தன் பிள்ளைக்கு வக்காளத்து வாங்கி அதிலும் அவர்களே    வென்றும்   விடுவார்கள் இவைகள் அனைத்தும் சின்ன வயதாக இருந்தபோது சரி போனால் போகட்டும் என்றே பிறரும் கண்டும் காணாமலும் விட்டு விட்டார்கள்  .ஆனால் காலப்போக்கில் அவன் வளர வளர அதே பழக்கமும் அவனுடன் சேர்ந்தே வளர ஆரம்பித்து விட்டது .ஒரு எல்லைக்கு மேல் அவனுடைய பெற்றோர்களால்க்  கூட அவனை அடக்க முடியாமல் போய்விட்டது .காரணம் என்ன ?....அவன் செய்த தவறுகளை கண்மூடித்தனமாக பெற்றோர்களே கண்டிக்காமல் அறிவுரை சொல்லாமல் அவனுக்கு பக்க சார்பாய் நடந்ததுதான் இதற்க்கு முக்கிய காரணம் .

                                          இதன் விளைவு இன்று என்னதான் ஆச்சு ????? .....தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்றாகி விட்டது .கண்ணன் பெயரில் மட்டும் அல்ல அவன் செயல்களிலும் அந்த மாயக் கண்ணனை மிஞ்சிவிட்டான் .எவ்வளவுதான் அறிவுரைகள் சொன்னாலும் அவை விழலுக்கு இறைத்த நீர்போல் ஆகிவிட்டது  .தீய பழக்க வழக்கங்களுக்கு  அடிமையான கண்ணனுக்கு அவனது கூட்டாளிகளின் அறிவுரையே என்றும் பெரிதென கருதும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போவதனால் பிறரிடத்தில் நன் மதிப்பு இழந்திருக்கும் அவனை அவன் பெற்றோர்களே வெறுத்து ஒதுக்கும் நிலை இன்று வலுவடைந்து விட்டது .இதனால் மேலும் மேலும் தன் அறிவைக் கூட அவன் தவறான பாதைகளில் செலவிடுவதில் பெரும் கில்லாடியாக வளர்ந்து வருவதை சொல்லி வேலை இல்லை!!!......இப்படி ஒரு பிள்ளையை பெற்றதற்கு அவனைப் பெற்றவர்கள் நாக்கைப் பிடுங்கிக்கொண்டே சாகலாம் என்று மக்கள் சாபம் இடும் அளவிற்கு அவன் முன்னேறி விட்டான் என்றால் பாருங்கள்!!!.. அதிலும் என்ன அதி விசேசம் என்றால் தனக்கே எல்லாம் தெரிந்ததுபோல் ஒழுக்கத்தைப்பற்றி அறிவுரை சொல்வான் பாருங்கள் ஸ்ஸ்ஸ்.... அம்மாடியோய்  போதும்டா ராசா ஆள விடு சாமி என்று மனுசன்  துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடும் அளவிற்கு படு கண்றாவியாய் இருக்கும் .எதிர்த்து நின்றால் போதும் எதிரே நிற்பவர்களுக்கு  சங்குதான் .அவன் பேச்சில்   எப்போதுமே மீன் தரையில்  வாழுகின்ற யீவனாக்கும் :))))) இதற்க்கெல்லாம் காரணம் என்ன சரியான பிள்ளை வளர்ப்பு இல்லை என்பதுதானே ???.........

                                                 

                      பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவது அது அந்தப் பிள்ளைகள் செய்த பெரும் புண்ணியம்.  ஆனாலும் தன் பிள்ளைகளின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளில் எப்போதுமே பெற்றோர்கள்  ஒரு நீதிபதியைப்போல் இருத்தல் என்பது மிக மிக அவசியமாகும். இது அந்தப் பிள்ளையின் எதிர்காலம் நல்லபடியாக அமைவதற்கு வழி வகுக்கும் .இல்லையேல் நாம் எப்படி நடக்கின்றோமோ அதே போன்று எதிர்காலத்தில் எம் பிள்ளைகளும் இருப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் வேண்டாம் .குழந்தைகளின் உள்ளம் என்பது ஒரு தூய்மையான வெற்றுத் தாள் போன்றது .இதில் நாம் எதை வரைகின்றோமோ அதை அடிப்படையாகக் கொண்டேதான்  அதன் குண இயல்புகளும்    அமையும் இன்னும் கொஞ்சம் அதிகமாக சொல்லப் போனால் கருவுற்று இருக்கும்போது  ஒரு  தாயின் மன உணர்வுகள் எவ்வாறு இருக்கின்றதோ அந்த உணர்வுகள்கூட பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளிலும் பிரதிபலிக்கும் என்பது ஒரு மருத்துவக் கணிப்பீடு .ஆதலால்தான் கர்ப்பிணித் தாயை அந்தப் பிரசவ காலத்தில் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எம்  முன்னோர்கள்  சில நல்ல   சடங்குகளைச்   செய்வதில் கூட ஆர்வம் உள்ளவர்களாக இருந்து வந்துள்ளனர் !....

  
இவைமட்டும் அல்லாமல் கர்ப்ப காலத்தில் மனதிற்கு இனிமையான  பக்திப் பாடல்களைப்  (கந்த சஷ்டி கவசம் போன்ற )  பாடுவதோ அல்லது கேட்பதுவோ கூட தாய்க்கும் பிறக்கப் போகும் சேய்க்கும் அருமையான நல்ல பலா பலனை அள்ளி வழங்கும்   என்பதுவும்  நூற்றுக்கு நூறு விகிதம்  உண்மை. எனவே அன்பார்ந்த பெற்றோர்களே எம் குழந்தைகள் நல்லவராகவும் வல்லவராகவும் வாழ்வது எம் வளப்பு முறையில் தங்கி உள்ளதால் எமது பாசத்தையும் நேசத்தையும்  ஒரு ஓரத்தில் தள்ளி வைத்துவிட்டு வளரும் எம் குழந்தைகளின் எதிர்கால நன்மை கருதி அவர்களின் நடவடிக்கைகளைக் கண்டு மனம் தளராமல் துணிந்து நின்று அவர்களை  நேர்வழியில் கொண்டு செல்ல நல்ல அறிவுரைகளையே என்றும் வழங்கி வாருங்கள் அவ்வாறு நல்ல அறிவுரைகளுடன் வளரும் பிள்ளைகளே நாளை உங்கள் பெயரையும் புகழையும் காக்கும் என்பதை ஒரு போதும் உணரத் தவறாதீர்கள் .                        

9 comments:

 1. பெண்கள் அவர்களது கர்ப்பகாலத்தில் நல்ல நூல்களை படிப்பது கூட நல்ல பயனளிக்கும் என்று நினைக்கிறேன்!

  நல்ல பகிர்வு! தொடரட்டும்!

  ReplyDelete
 2. அருமையான பதிவு.பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

  ReplyDelete
 3. நல்ல பல கருத்துக்கள்... இன்னும் இது போல் தொடருங்கள்... நன்றி...

  ReplyDelete
 4. அருமையான பதிவு இன்றைய சூழலுக்கு தேவையானதும் கூட .......வாழ்த்துக்கள்

  மேலும் உங்கள் தளத்தை இன்னும் செம்மை படுத்துங்கள் நீல அகலங்களை குறுக்கினால் இன்னும் அழகாக இருக்கும்

  ReplyDelete
 5. இளம் பெற்றோர்கள் கவனத்தில் எடுக்கவேண்டிய பதிவு !

  ReplyDelete
 6. அருமையான பதிவு

  ReplyDelete
 7. // பெற்றோர்கள் பிள்ளைகள் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவது அது அந்தப் பிள்ளைகள் செய்த பெரும் புண்ணியம். ஆனாலும் தன் பிள்ளைகளின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளில் எப்போதுமே பெற்றோர்கள் ஒரு நீதிபதியைப்போல் இருத்தல் என்பது மிக மிக அவசியமாகும். இது அந்தப் பிள்ளையின் எதிர்காலம் நல்லபடியாக அமைவதற்கு வழி வகுக்கும் //

  பயனுள்ள கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .