Friday, August 31, 2012

பெரிது ....பெரிது.... பெரிது !!.......



நான் பெரிதா ?...நீ பெரிதா  ?...என்   மதம் பெரிதா ?...    உன் மதம்  பெரிதா ??...இவ் உலகினில்    இன்று    உள்ள   பெரும்   குழப்பமே    இதுதான் .  தெரியாமல்தான் கேட்கின்றேன்  இங்கு யார்தான்   பெரியவர்கள் ?....  கற்றது கைமண் அளவு நாம்  கல்லாதது   உலகளவு   என்று   உள்ளபோது   அறிவை   வைத்து    ஒருவனை பெரியவன்  இவன்தான்  என்று  எப்படி   தீர்மானித்து   விட  முடியும் ?.....அப்படி முடியுமானால்   அவன்   எல்லாம்   கற்றறிந்தவனாக   அல்லவா      இருத்தல் வேண்டும் .உண்மையில்    அதிகம் படித்தவர்கள்   என்றுமே தன்னைத் தானே அறிவாளி   என்று   காட்டிக்கொள்ள    விரும்புவதில்லை .

                 பணம் படைத்தவன் அதிலும் பரம்பரை பரம்பரையாய் பணம் படைத்தவன் அவனும் எப்போதும் தன்னிடம் உள்ள பணத்தை வைத்து தன்னை பெரியவன் என்று எண்ண மாட்டான் .நல்ல குணம் படைத்தவன் அதி வீரம் உடையவன் அவனும் தன்னை அவ்வாறு நினைக்க மாட்டான் .ஆக நாம் வாழும் இந்த பூமியில் யாருக்கு அதிகமாக போட்டி மனப்பாண்மை உள்ளதோ அவகளுக்குத்தான் இந்த எண்ணம் அதிகமாக இருக்கும் .ஆரோக்கியமான சில போட்டிகள் வாழ்வை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். அதேபோன்று தேவை அற்ற வீண் விவாதத்தை வளர்த்துக்கொள்ளக் கூடிய    மனித பண்பை சீர்குலைக்கும்  நோக்குடன் தொடரும்  போட்டிகள் என்றுமே  எம்மை அழிவின்   பாதைக்கே   இட்டுச்   செல்லும் .

                                   ஆக  எமக்கு    எல்லாம்    தெரிந்தாலும் கூட எதுவுமே தெரியாதவர் போல் பிறரை ஊக்குவிப்பதிலும்   மேலும் பல நல்ல விசயங்களை தெரிய    முற்படும் போதும் எம்மை அறியாமலே அந்த மனிதர்கள் மீது ஒரு தனிப்பட்ட மரியாதை வந்துவிடும் .இதை விட்டு விட்டு கீழ்த்தரமாக பிறருடன் எம்மை நாம் ஒப்பிட்டு ஒரு தகுதியை எமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளுதலும்    பிறர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு நகைப்பதும் ,  தன்னை மதியாதவரிடம் சண்டை போடுவதும் ,அவர்களை பிறர் மதித்து நடத்தல் கூடாது எனும் நோக்குடன் இல்லாத குற்றங்களை  சுமத்தி அவமதிப்பதும் மனித பண்புகளுக்கு என்றுமே அப்பாற்பட்ட செயலாகும் .
  


இறைவன் எவ்விடத்திலே வாழ்கின்றான்?...அவன்   நல்ல   பண்பு      உள்ள இடத்தில் வாழ்கின்றான் ,அன்பு உள்ள இடத்தில்    வாழ்கின்றான்   தன்னை சந்தேகிக்காத இடத்தில் வாழ்கின்றான் .     அவ்வாறு    ஓர் இடம்     உள்ளது
என்றால்    அது   நிட்சயமாக      குழந்தைகளின்         மனமாகத்தான்  இருக்க  வேண்டும்.    ஆதலால்தான்  குழந்தையும் தெய்வமும் ஒன்று   என்றார்கள். காரணம் அவர்களுக்கு அந்தப் பருவத்தில் போட்டி   மனப்பாண்மை என்பது இருப்பதில்லை .பிறரை வஞ்சிக்கும்   எண்ணம்    எதுவும்     இருப்பதில்லை. தெளிந்த      நீரோடை    என்பதே    மழலைகள்    மனங்கள்தான் .   நாம்    தெரியாத ஒன்றைப்  பற்றி   தெரிய     முற்படும்போதுகூட      எமக்கு அதிகம்    தன்னடக்கம் இருக்க வேண்டும் .


தன்னடக்கம் அற்ற பண்பு உடையவர்களுக்கு எதையும்      சொல்லிப்    புரிய வைப்பது   என்பது
மிகவும்   கடினமான ஒரு விசயம் .அவர்கள்    எப்போதும் தான் சொல்வதே   சரி என்று வாதிடும்
வல்லமை பெற்றவர்களாய்    மட்டும் இருப்பவர்கள்.   பிறரை   முட்டாள்   என்று கருதுபவர்கள்
என்றுமே ஒரு நல்ல அறிவாளியாக    இருக்க   முடியாது. அறிவாளிகளின்  பண்பே தான் அறிந்த
ஒன்றைப் பிறரும் அறியும் வகையில் செயல்படுத்துவதே .    ஒரு ஆசிரியர்     அவர் இல்லை
என்றால் எமக்கு அறிவுக் கண்களை திறந்து வைப்பவர் யார்?...நாம் கற்றது , கேட்டது  கண்களால்  
கண்டுகொண்டவை     இவைகள்தானே   எம் அறிவின் மூலதனம்!!!..........


 ஐம் புலன்களையும்  அடக்கி அகிலத்தில் தான் இருக்கும்   நிலை மறந்து மெய்ஞானத்தின்
வழியே  வாழ்வின் எல்லைகள்  கடந்து   இருந்த இடத்தில் இருந்து  கொண்டே    உலகத்தை
அளக்கும்    சக்தி   கொண்ட மா    மனிதனே எம்மில்    பெரியவன் .நாம் போற்றி   மதிக்கப்பட
வேண்டியவன் அவன் எமக்கு அருளிய   தத்துவங்களே      அறிவிற்கு   அத்திவாரம் . இதனை  
பின்பற்ற   மறந்தவர்கள்      எவர்களாயினும்    அவர்கள்   வெறும்   பதர்களே!!!......    நரிகளின்
ஊளையைக் கேட்டு  அஞ்சி    நடுங்கும்    ஐந்தறிவு    ஜீவனாக நாம்   வாழ்வதும்    எம் தவறே
ஆகும் .   எப்போதும்    எடுத்த    காரியத்தில்   தெளிவும்    உறுதியும்   இருத்தல்  வேண்டும் .
விமர்சனங்களுக்கு     பயந்தோ     அல்லது     சுயலாபம்   கருதியோ    பலருக்கும்    நன்மை
பெயர்க்கும்   செயலைக் கைவிடல் என்பது சிறந்த    அறிவாளிகளுக்கு    அழகல்ல .பலரும்
பாராட்டக்கூடிய ஒரு செயல் அதை    எல்லோராலும்    செய்து    விட    முடியாது .
இதற்க்கு   எப்போதும் தடைக்கல் அதிகம் வந்து விழும் .அதையும் தாண்டி சாதிக்கும் வரை
மனிதன் ஒரு போதும் ஓயாமல் உழைக்க வேண்டும் .


                                     
                                             

                                      

15 comments:

  1. நிறைகுடம் ஒரு போதும் தலும்புவதில்லை..

    அருமையான சிந்தனைகளை கொண்ட நல்ல பதிவு! தொடர்ந்து இதே பாதையில் பயணியுங்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் பாராட்டிற்கும் .

      Delete
  2. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது... நல்ல பல கருத்துக்கள்... திருக்குறளுடன் முடித்தது மேலும் சிறப்பு... வாழ்த்துக்கள்...

    (இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி விட்கேட் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நிறுத்தி வைக்கவும்... (Edit html and Remove Indli Widget) தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் ,தகவலிற்கும் .

      Delete
  3. அருமையான கருத்துக்கள் .பகிர்ந்தமைக்கு நன்றி. படங்கள் அருமையாகவுள்ளது. தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ வரவிற்கும் இனிய கருத்திற்கும் .

      Delete
  4. " நிறை குடம் தளும்பாது " என்பதை விளக்கும் கட்டுரை. ஆங்காங்கே இறைமையை உணரச்செய்யும் யுத்தி ! அதுவும் கட்டுரையின் கடைசி பத்தியில் ஒரு தேர்ந்த தத்துவ ஞானி போல தாங்கள் எழுதியிருப்பது வியப்பளிக்கிறது !

    ReplyDelete
  5. மிக்க நன்றி சகோ வரவிற்கும் உற்சாகம் ஊட்டும் இனிய கருத்திற்கும் .

    ReplyDelete
  6. அடக்கம் அமரருள் உய்க்கும் - என்பதை விளக்கும் சிறப்பான ஆக்கம்.

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையான சிந்தனைகொண்ட பதிவு.. வாழ்த்துகள்..
      அன்புள்ளம்
      அதுவே
      அனைவரிடத்திலும் இருந்தால்
      இதுவே
      அனைத்திலும் சிறப்புலகம்..

      Delete
  7. இன்றைய சூழலில் அவசியம் அனைவரும்
    வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்பை
    வலியுறுத்தி மிக அழகாக பதிவு கொடுத்தமைக்கு
    மனமார்ந்த நன்றி
    படங்க்களுடன் பதிவு மனத்தைக்
    கொள்ளை கொண்ட்து
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. குழந்தைகளாகவெ இருந்திருக்கலாம்.வளர வளர அறிவும் அன்பும் இல்லாமல் போகிறது.நல்லதொரு பதிவு !

    ReplyDelete
  9. அருமையான கருத்துக்கள். இன்றைய சூழலில் அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள்.

    ReplyDelete
  10. மனத் தைரியத்தை விதைக்கும் கட்டுரை . மாமனிதனை அடையாளம் காட்டும் கட்டுரை .ஆரோக்கியமான கட்டுரை . ஆழமாக மனதைத் தொடுகின்றது வாழ்த்துகள்

    ReplyDelete
  11. மிகச்சிறப்பான, மகிழ்வளிக்கும் கட்டுரை. பாராட்டுக்கள்.

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .