Friday, August 24, 2012

இப்படியா அப்படியா வேறு எப்படி....

கற்றது கை மண்ணளவு கல்லாதது  உலகளவு எனில் இந்த உலகத்தில் நாம்
பிறக்கும் போதே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு வந்து பிறக்கின்றோமா?.
அல்லது  இறக்கும் போது எதுவுமே கற்றுக் கொள்ளாமல் இறக்கின்றோமா?...
அவரவர் சக்திகேற்றது எதையோ தன் தேவை கருதி மனிதன் கற்கின்றான்
அவன் கற்றுக் கொண்ட அறிவை வைத்துக்கொன்டுதானே அவனும் தனது
அன்றாட தேவைகளைப்   பூர்த்தி   செய்கின்றான் .அப்படி இருக்கையில் நாம்
அறிவாளி முட்டாள் என்ற பேதங்களை நமக்குள் வளர்த்துக் கொள்ளலாமா!.
தெரியாததைத்  தெரிந்துகொள்ள முயற்சிப்பவனே திறமைசாலி.ஆனாலும்
எனக்கு எதுமே தெரியாது தெரிந்துகொள்ளவும் ஆர்வம் கிடையாது எனில்
இப்பேர்ப்பட்ட மனிதர்கள் எவ்வாறு தம் வாழ்வை வெற்றிகொள்ள முடியும்?..


இங்கு குறைகளை சுட்டிக்காட்டி  நல்வழிப்   படுத்துபவர்கள்    மனிதர்கள் குத்திக்காட்டி  திசை திருப்புபவர்களை   எவ்வாறு சொல்வது!........
பிறந்த குழந்தை பிறந்த கணமே தவழ்ந்ததாகவோ ஓடியதாகவோ உலகில்
ஒரு நிகழ்வு எங்கேனும் கேள்விப் பட்டதுண்டா?...ஆக ஒரு மனிதன் தனக்கு
தெரியாதவற்றை தெரிந்துகொள்ள முயற்சிக்கும்போது ஆயிரம் தவறுகள்
நிகழாலாம் ஒரு வேளை நாம் எடுக்கும் முயற்சிகள்கூட  தோல்வியுறலாம்.
அதற்காக நாம்  எதையும் கற்றுக்கொள்ளத்  தகுதி அற்றவர்கள் என்று எம்மை
நாமே புறக்கணித்தல் முறைதானா?...
                                   
               எதையும் சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியை இப்போதுதான்
எமக்குள்ளே நாம் வரவளைத்துக்கொள்ளல் வேண்டும் . எம் தேவைகளை
நாமே பூர்த்தி செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் .அடுத்தவர் தயவில் எம்
வாழ்க்கை  என்று வாழ்ந்து வந்தால்  எமது   எதிர்காலம்   என்பது என்றுமே
எமக்கு அர்த்தமற்றதாகவே அமையும் . வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட
நாம் எம்மைப்போல் அல்லாது எமது சந்ததியினரை வளப்படுத்த சிற்சில
பயிற்சிகளை   அவர்களுக்கும்  நாம்   குழந்தையில்   இருந்தே வழங்கி வர வேண்டும் .
                                                       
சிறு பிள்ளைகளை அதட்டுவதோ அல்லது எதற்கு எடுத்தாலும் பயம்
உறுத்தி  வளர்ப்பதோ மிகவும்  தவறான காரியம் என்பதை   நாம் நன்கு
உணர வேண்டும் .சின்ன வயதில் இருந்தே எதற்கும் பயந்த சுபாவம்
உடையவர்களாய் வளரும் குழந்தைகள் படிப்பிலும் சரி பிறருடன் பேசிப்
பழக , தனக்கு வரும் சந்தேகங்களை  ஆசிரியரிடமோ அல்லது உறவினர்
நண்பர்களிடமோ கேட்பதக்கும் மிகவும் கூச்சப் படுவார்கள் .இதனால்
எதையும் அறியும் தன்மையும் ,வெளிக்காட்டும் தன்மையும் இவர்களிடம்
என்றும் குறைவாகவே இருக்கும் .எனவேதான்  ஐரோப்பா  நாடுகளில்
சிறு பிள்ளைகளுக்கு பாடசாலை ஆரம்பிக்கும் முன்பே பிள்ளைகளுடன்
சேர்ந்து விளையாடுவதற்கும் ,விளையாட்டு மூலம் கல்வி பயிலவும் 
இரண்டு வருட பயிற்சி வழங்கிய பின்னர் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்
கொடுக்கின்றனர் .பிள்ளையின் துணிச்சல் ,ஒழுக்கம் ,ஆக்கத் திறன் என
அனைத்தும் பார்த்தே இவர்களின் வகுப்புத் தரமும் பிரிக்கப் படுகின்றது.
                               
                                     
                                  பயங்கரமாய்க் குளிரும் ஆனால் இவர்களுக்கு!..
                                       
 
                                   தம்பி வேணாம்டா  ராசா விழுந்தா நீ செத்திருவ !!!.. 
                       
                   
                                    அட பாவமே பச்சக் குழந்த தனியா சாப்பிடுதே!!!...                                                         

                                         
 என்ன இருந்தாலும் கடின உழைப்பாளிகள் நம்ம ஆளுங்கதான்!!!.....
இதை மேலும் வளப்படுத்த வேண்டும் எனில் அச்சம் தவிர்த்து எம்
அன்பால் வெல்வோம் .நாளைய சமுதாயத்தின் விடிவெள்ளிகள்
இவர்கள் என்பதைக் கருத்திக்ல்கொண்டு ..                                                                                           
      

16 comments:

  1. வணக்கம் தோழி.அச்சம் தவிர் என்பதைதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .
      எம் இனிய உறவு மேலும் தொடரட்டும் .

      Delete
  2. மிக்க நன்றி தோழி தங்கள் வரவுக்கும் இனிய நற்
    கருத்திற்கும் .

    ReplyDelete
  3. .நாளைய சமுதாயத்தின் விடிவெள்ளிகள் ''' இனிய் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .
      எம் இனிய உறவு மேலும் தொடரட்டும் .

      Delete
  4. சரியாய் சொல்லி இருக்கிங்க சகோ ...
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரரே தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் .

      Delete
  5. அருமையாக கூறியுள்ளீர்கள். விவேகானந்தரின் பொன்மொழியை அழகாக கூறியுள்ளீர்கள்.
    படங்கள் அருமை. உங்கள் தளம் மிக அழகாகவுள்ளது.
    தொடருங்கள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தங்கள் வரவும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் .
      வரவு தொடர வாழ்த்துக்கள் .

      Delete
  6. பூச்சாண்டி,ஒத்தைக் கண்ணன்ன்னு சொல்லிச் சொல்லியே அந்தப் பயம் இப்பவும் இருக்கு !

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பயம் எம்மில் நிறையப்பேருக்கு இருக்கு என்றுதான்
      நானும் நினைக்கின்றேன் .அதனால்தான் இதை எழுதத்
      தூண்டியது .மிக்க நன்றி தோழி தங்கள் வரவுக்கும் கருத்திற்கும் .¨
      மேலும் வரவு தொடர வாழ்த்துக்கள் .

      Delete
  7. தோழி ஹேமா அவர்கள் அருமையாக சுட்டிக் காட்டியுள்ளார்!!!

    மனிதர்கள் பலவிதம். படங்களையும் அழகாக இணைத்துள்ளீர்கள்...

    தொடருங்கள், வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ தங்கள் வரவும் உற்சாகம்
      ஊட்டும் பதிலும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க
      நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்திற்கும் .

      Delete
  8. குழந்தைகளை நல் அறிவுரைகள் கூறி நல்வழி நடத்தி பிடிக்காததை கூட அவர்களுக்கு பிடித்தமாதிரி செய்து கொடுத்து படிக்க சிரமப்படும் பிள்ளைகளுக்கு எளிதாக்கி கொடுத்து அடிக்காமல் அன்பாக சொல்லிக்கொடுத்து தவறு செய்தால் தண்டிக்காமல் அன்புடனே குறைகளை அகற்றும் வழிதனை சொல்லிக்கொடுத்து முன்னேற வழியும் காட்டினால் எல்லாக்குழந்தைகளுமே சாதிக்க முனைந்து வெற்றிச்சிகரத்தை தொடுவார் என்பதில் ஐயமில்லை என்று நம்பிக்கையுடன் நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள்.... மிக மிக அருமை....

    விவேகானந்தர் பொன்மொழி சொல்வது போல தட்டிக்கொடுக்கும்போது குழந்தைகளுக்கும் ஏன் பெரியவர்களுக்கும் கூட தான்.... உற்சாகம் பிறந்து அட நம்முடையது அத்தனை சிறப்பு பெற்றதா அப்ப இன்னும் முனைவோம் முயற்சியை தொடருவோம் என்று சாதிப்பதை தொடர விருப்பமும் கொள்வார்கள்.... உண்மையே...

    குழந்தைகளை மிரட்டி அடித்து பயமுறுத்தி துன்புறுத்தினால் அந்த நிமிடத்திற்கு வேண்டுமென்றால் குழந்தை கட்டுப்படலாம் அடிக்கு பயந்து... படித்தும் விடலாம் துன்புறுத்தலுக்கு பயந்து... சாப்பிட்டுவிடும் மிரட்டலுக்கு பயந்து... ஆனால் அதுவே தொடரும் என்று சொல்லமுடியாது... குழந்தை மனதில் நம் செயல்கள் நம் வார்த்தைகள் எல்லாமே பசுமரத்தாணி போல் பதியும் அசகாய வேகம் கொண்டது.... அது நன்மை விளைவிக்குமோ அல்லது எதிர்மறையாகுமோ சொல்ல இயலாது....

    அதனால் அன்பை தவிர வேறெதுவுமே ஆயுதமாக எடுக்காதீர்கள் குழந்தைகளை வளர்க்கவும் நல்வழி படுத்தவும் என்று அன்பாய் உரைத்த விதம் மிக அருமை தோழியே...

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு... தொடர அன்பு வாழ்த்துகள்....

    ReplyDelete
    Replies
    1. விரிவாகக் கருத்திட்டு மனதார வாழ்த்திச் சென்ற அன்புத்
      தோழிக்கு என் நன்றிகளும் வாழ்த்துக்களும் இந்த உறவு
      மேலும் மேலும் தொடர .....

      Delete
  9. அன்பாய் உரைத்த விதம் மிக அருமை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    நாளைய சமுதாயத்தின் விடிவெள்ளிகள் ;)

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .