Wednesday, September 12, 2012

பழிவாங்கும் உணர்வுகள் நல் வழிகாட்டுமா!....

அந்தி சாயும் அழகு என்ன அழகோ !....உடல் அலுப்படைந்து இருந்தாலும் எங்கள் நாட்டில் நாம்   பெற்ற இன்பம் அவை இனி என்றுதான் கிட்டும்  .இந்த வேதனை எந்தத் தமிழன் நெஞ்சில் இல்லை என்று சொல்லுங்கள் ?...எம் கடந்த கால வாழ்க்கையில் இருந்த சந்தோசம் ,நின்மதி இனி இந்த ஜென்மத்தில் எவ்வளவுதான் இருந்தாலும் பெற்றுவிட முடியுமா?..ஆரோக்கியம் அற்ற உணவுக்கும் வீண் அலைச்சலுக்கும் பழக்கப்பட்ட உடலும் மனமும் வெறும் பிண்டமே ஒளிய இதற்க்கு எங்கே ஆயுட் பலம் உள்ளது !...யாரைக் கேட்டாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் அதிலும் குறிப்பாக வேலைக்குப் போபவர்கள் ஏதோ இருக்கின்றோம் என்ற சொல்லைத் தவிர அவர்களிடம் அதிகம் எதையும் எதிர்பார்க்க முடியாது. இதிலிருந்து நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில்  எவ்வளவுதான் பணம் இருந்தாலும் மனிதன் அதிகம் நேசிப்பது உறவுகளையும் அவனுடைய கடந்த கால நினைவுகளையும்தான் .அந்த நினைவுகளும் உறவுகளும் இன்று இருந்த இடமே தெரியாமல் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டு வெற்றிடங்களாக காட்சி தரும்போது மனித மனங்கள் மரத்துப் போவதும் எதிலும் பற்றற்று வாழ்வதும் இயல்பாக ஏற்படக்கூடிய தாக்கங்கள்தானே .இந்தத் தாக்கங்களால் இன்று எம் சமூகம் எதிர்நோக்கும் அவலங்கள் அவை சொல்லில் அடங்காது. மனங்களில் சுமைகளை மறைத்து  வைத்து விட்டு எல்லோரையும்போல போலியாக சிரித்துக்கொண்டும் எந்தக் கஸ்ரமும் இல்லாத சாதரணமான மனிதனைப்போல் தன்னையும்  அடையாளப்  படுத்தும் இந்த உறவுகள் பலதரப்பட்ட பணிச் சுமைகளில் சிக்குண்டு வதைக்கப்ப்படும்போது பல முறை மரணித்து உயிர் பெறுவதை எம் அகக்கண்கொண்டு முழுமையாக உணர முடிகிறது .இவர்களைப் பார்க்கும்போது  எம் முன்னோர்கள் செய்த பாவம்தான் என்ன என்ற கேள்வியும் ஆறாத வேதனையும் ஈட்டிபோல் நெஞ்சைத் துளைபோடுகின்றது ஏன் இப்படி !!!!......
                             
எல்லா விதத்திலும் தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் உறவுகளின் உணர்வுகளை சில சமயங்களில் பிறர்  புரிந்துகொள்ளாமல் நடக்கும்போது அந்த சமயத்தில் இவர்களின் பேச்சு செயல் யாவுமே முற்றிலும் மாறு பட்டதாக   இருக்கும் .இதற்க்கு காரணம் அவர்களின் மன அழுத்தம் அல்லால் வேறென்னவாக இருக்க முடியும் .இவர்களை நாம் குற்றவாளிகள் என்று கணக்கிட முடியுமா !..அவர்களுடைய வாழ்க்கைச் சூழல் அப்படி .இந்த மாதிரி கனத்த இதயங்களுடன் வாழும் எம் உறவுகளை நாம் ஆதரிக்க வேண்டும் அல்லால் அவர்களை ஒதுக்கி வைப்பதோ அல்லது அவர்களின் குண இயல்புகளை குறைவாக மதிப்பிட்டு புறம் பேசித் திரிவதோ மனிதநேயம் அற்ற செயலாகும் . .பிறர் துன்பப் படும்போது அவர்களின் துன்பத்தை ஆற்ற முற்பட வேண்டும் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் .இந்த தார்மீக குணம் எமக்குள் இல்லை என்றால் முதலில் எம்மைப் பார்த்தே நாம் வெக்கப்பட வேண்டியவர்கள் என்பதை   புரிந்துகொள்வதும்  மிக மிக அவசியமான ஒன்றாகும். ஒருவர் நல்லவராக   இருப்பதும் கெட்டவராக இருப்பதும் அவரவருடைய வாழ்க்கைச் சூழலில்தான் தங்கி உள்ளது ஆனாலும்  எமக்கு ஒருவருடைய செயல் பிடிக்கவில்லை ,பேச்சு பிடிக்கவில்லை என்றொரு சூழ்நிலை ஏற்படும்போது சரிக்கு சமன் வாதிடுவதும் வீண் விரோதங்களை வளர்த்துக்கொண்டு ஆளையாள் குற்றஞ் சுமத்திக் கொள்வதும் நீண்ட நாள் பகை என்ற எண்ணம் உருவாவதற்கு இடமளிக்கின்றது. இது ஒரு முற்றிலும் தவறான பழக்கம்.  இந்த மாதிரி குணாதிசயங்கள் உள்ளவர்கள் இதைத் தவிர்த்து வாழ்வதே மிகவும் ஆரோக்கியமான விடயம். இல்லையேல் அதிக புரிந்துணர்வு அற்ற நிலையால் ஒருவரை ஒருவர் தாக்குவதும் அழிக்க வேண்டும் என்ற கொரூர எண்ணங்கள் உருவாவதற்கு வழி வகுத்துவிடும். இந்த தீய குணாதிசயங்களால் இன்று பல இடங்களிலும் நிகழும் உண்மைச் சம்பவங்களை நாம் அன்றாடம் கேள்வியுற்ற வண்ணம்தான் இருக்கின்றோம் இருந்தும்    இதைப்பற்றி அதிகம் நாம் அக்கறை கொள்வதில்லை எமக்கு ஒன்று நிகழ்ந்த பின்னர் நாம்  அப்படிச் செய்திருக்கலாம் இப்படிச் செய்திருக்கலாம் என்று சிந்திப்பதை விட முற்கூட்டியே பகைமையை தவிர்த்து ஒற்றுமையாக வாழ முயற்சிக்கலாம் அதற்க்கும்  மனம் இடமளிக்கவில்லை என்றால் பழிவாங்கும் உணர்வுகளைக் கைவிட்டு விட்டு ஒதுங்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும் .


தீய குணாதிசயங்களை நாம் கைவிடும்போது அதிஸ்டம் எம்மைத் தேடி வரும். அதே சமையம் தீய குணாதிசயங்களை நாம் தேடிச் செல்லும்போது  துரதிஸ்டம் எம்மோடு கூடி வரும். பிறருக்காக இல்லாது போனாலும் நாம் எம்மை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீண் விவாதங்களை முற்றிலும் தவிர்த்தல் எல்லாவகையிலும் நன்மை பெயர்க்கும் என்பதில் துளியேனும் சந்தேகம் இல்லை.இதையெல்லாம் விட்டு விட்டு  காட்டுமிராண்டித் தனமாக ஊர் வம்பு வளர்த்தலும் பிறரின் தனிப்பட்ட விசயங்களில் தலையிட்டு குழப்பம் விளைவித்தலும் ,எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்பதுபோல தலைக்கனம்கொண்டு பிறர் மனதை நோகடிக்கும் செயல்களில் அதிக ஆர்வம் காட்டுவதும் ,அடுத்தவர்களுடைய வாழ்வை ஒரு பொழுதுபோக்காக கருத்தில்கொண்டு நையாண்டி செய்வதும் தூங்கிக்கொண்டு இருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பி வேடிக்கை காட்டுவதுபோல் அமையும் .


இப்படி ஒரு துன்பம் எமக்குத் தேவைதானா?......   நாம் எல்லோரும் இங்கு மனிதர்கள்தானே பிறர் வாழ வாழ்த்துவதாலும்  பிறர் துயரைப் போக்க நல் வழி காட்டுவதாலும் உண்டாகும் சந்தோசத்திற்கு எல்லை ஏது!..... நல்லதைப் பேசி நல்லதையே  செய்தால்  உள்ளமும் வளம்பெறும் எம் உணர்வுகளும் தெளிவடையும். இனியும் பொல்லாங்கு பேசுவதைத் தவிர்த்து உள்ளன்போடு உறவுகளை மகிழ வைத்து நாமும் குறைந்தபட்சமேனும் மனிதர்களாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் .ஆதலால்  விட்டுக்கொடுப்பு என்பது இயலாமை அல்ல அதுவும் ஓர் வீரச் செயலென எண்ணி எமக்குள் இருக்கும் போட்டி பொறான்மை ,வஞ்சகம் சூது சந்தேகம் ,தாழ்வுமனப்பான்மை ,களவு ,பொய் பேராசை ,போன்ற மனித பண்புக்கு இழுக்கான தீய குணங்களை அடியோடு வெறுத்து ஒதுக்கிவிட்டு அன்பை அகம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு வாழ்வோமானால் அதுவே இந்த உலகத்தின் விடிவுக்கு வழி காட்டியாகும் .

                                                   
    ஒரு விசயத்தை நாம் எப்படித்தான் சொன்னாலும் அது அவ்வளவு சுலபமாக பிறரை சென்றடையாது .ஆனால் இந்த ஞானிகள் ஓரிரு வரிகளில் எவ்வளவு அழகாக சொல்லி முடிக்கின்றார்கள் பாருங்கள் !!!!.....இதுதான் வாழ்க்கையின் உண்மையான தத்துவம் .இதையேதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பது இன்றைய என் கருத்து .மிக்க நன்றி உறவுகளே தங்கள் வரவிற்கும் இனிய கருதுகளிற்க்கும் .

                                                                       அன்பு உள்ளம்                                                                         

7 comments:

  1. பிறருக்காக இல்லாது போனாலும் நாம் எம்மை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள வீண் விவாதங்களை முற்றிலும் தவிர்த்தல் எல்லாவகையிலும் நன்மை பெயர்க்கும் என்பதில் துளியேனும் சந்தேகம் இல்லை

    சிறப்பான வரிகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. பழி வாங்கும் நம் மனதில் எழுந்தாலே, முதல் பலி நாம் தான்...

    நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கும் கருத்துக்கள்... பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
  3. தனனை அறிதல்... சும்மா இருத்தல்.... இரண்டும் எளிதானவையா என்ன..? அது சாத்தியப்பட்டால் நாமும் ஞானிதான். மொத்தத்தில் இதயத்தில் அன்பை வழியவிட்டுக் கொண்டு நாம் வாழ்ந்தால் போதும் என்பதே என் நிலைப்பாடு. முதல் வருகை இத்தளத்திற்கு நான். இனி தொடர்ந்து வருகிறேன். நன்றி. (நீங்க ஸாரா, மேடமா?)

    ReplyDelete
  4. நல்லக் கருத்தை அழகாகவும், நேர்த்தியாகவும் கூறியுள்ளீர்கள் நண்பா...

    வாழ்த்துகள் தொடரட்டும்...

    ReplyDelete
  5. இது சின்ன விஷயமே இல்லை.ஆழமான கருத்துக்கள் கொண்ட பதிவு.தொடருங்கள் !

    ReplyDelete
  6. நல்ல அருமையான கருத்துக்கள்.

    ReplyDelete
  7. //முற்கூட்டியே பகைமையை தவிர்த்து ஒற்றுமையாக வாழ முயற்சிக்கலாம் அதற்க்கும் மனம் இடமளிக்கவில்லை என்றால் பழிவாங்கும் உணர்வுகளைக் கைவிட்டு விட்டு ஒதுங்கி வாழ கற்றுக்கொள்ள வேண்டும் .//

    மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். அதே அதே ! ;)

    ReplyDelete

வணக்கம் அன்பு உறவுகளே இந்த ஆக்கங்கள் உங்களுக்கு
பிடித்திருந்தால் அதற்க்கு வாக்களித்து உங்கள் கருத்துக்களை
வழங்குமாறு மிகவும் பணிவன்போடு வேண்டிக்கொள்கின்றேன் .
மிக்க நன்றி வரவுக்கும் இனிய நற் கருத்துகளிற்கும் .