நான் பெரிதா ?...நீ பெரிதா ?...என் மதம் பெரிதா ?... உன் மதம் பெரிதா ??...இவ் உலகினில் இன்று உள்ள பெரும் குழப்பமே இதுதான் . தெரியாமல்தான் கேட்கின்றேன் இங்கு யார்தான் பெரியவர்கள் ?.... கற்றது கைமண் அளவு நாம் கல்லாதது உலகளவு என்று உள்ளபோது அறிவை வைத்து ஒருவனை பெரியவன் இவன்தான் என்று எப்படி தீர்மானித்து விட முடியும் ?.....அப்படி முடியுமானால் அவன் எல்லாம் கற்றறிந்தவனாக அல்லவா இருத்தல் வேண்டும் .உண்மையில் அதிகம் படித்தவர்கள் என்றுமே தன்னைத் தானே அறிவாளி என்று காட்டிக்கொள்ள விரும்புவதில்லை .
பணம் படைத்தவன் அதிலும் பரம்பரை பரம்பரையாய் பணம் படைத்தவன் அவனும் எப்போதும் தன்னிடம் உள்ள பணத்தை வைத்து தன்னை பெரியவன் என்று எண்ண மாட்டான் .நல்ல குணம் படைத்தவன் அதி வீரம் உடையவன் அவனும் தன்னை அவ்வாறு நினைக்க மாட்டான் .ஆக நாம் வாழும் இந்த பூமியில் யாருக்கு அதிகமாக போட்டி மனப்பாண்மை உள்ளதோ அவகளுக்குத்தான் இந்த எண்ணம் அதிகமாக இருக்கும் .ஆரோக்கியமான சில போட்டிகள் வாழ்வை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும். அதேபோன்று தேவை அற்ற வீண் விவாதத்தை வளர்த்துக்கொள்ளக் கூடிய மனித பண்பை சீர்குலைக்கும் நோக்குடன் தொடரும் போட்டிகள் என்றுமே எம்மை அழிவின் பாதைக்கே இட்டுச் செல்லும் .
ஆக எமக்கு எல்லாம் தெரிந்தாலும் கூட எதுவுமே தெரியாதவர் போல் பிறரை ஊக்குவிப்பதிலும் மேலும் பல நல்ல விசயங்களை தெரிய முற்படும் போதும் எம்மை அறியாமலே அந்த மனிதர்கள் மீது ஒரு தனிப்பட்ட மரியாதை வந்துவிடும் .இதை விட்டு விட்டு கீழ்த்தரமாக பிறருடன் எம்மை நாம் ஒப்பிட்டு ஒரு தகுதியை எமக்குள் நாமே வளர்த்துக் கொள்ளுதலும் பிறர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு நகைப்பதும் , தன்னை மதியாதவரிடம் சண்டை போடுவதும் ,அவர்களை பிறர் மதித்து நடத்தல் கூடாது எனும் நோக்குடன் இல்லாத குற்றங்களை சுமத்தி அவமதிப்பதும் மனித பண்புகளுக்கு என்றுமே அப்பாற்பட்ட செயலாகும் .
இறைவன் எவ்விடத்திலே வாழ்கின்றான்?...அவன் நல்ல பண்பு உள்ள இடத்தில் வாழ்கின்றான் ,அன்பு உள்ள இடத்தில் வாழ்கின்றான் தன்னை சந்தேகிக்காத இடத்தில் வாழ்கின்றான் . அவ்வாறு ஓர் இடம் உள்ளது
என்றால் அது நிட்சயமாக குழந்தைகளின் மனமாகத்தான் இருக்க வேண்டும். ஆதலால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள். காரணம் அவர்களுக்கு அந்தப் பருவத்தில் போட்டி மனப்பாண்மை என்பது இருப்பதில்லை .பிறரை வஞ்சிக்கும் எண்ணம் எதுவும் இருப்பதில்லை. தெளிந்த நீரோடை என்பதே மழலைகள் மனங்கள்தான் . நாம் தெரியாத ஒன்றைப் பற்றி தெரிய முற்படும்போதுகூட எமக்கு அதிகம் தன்னடக்கம் இருக்க வேண்டும் .
தன்னடக்கம் அற்ற பண்பு உடையவர்களுக்கு எதையும் சொல்லிப் புரிய வைப்பது என்பது
மிகவும் கடினமான ஒரு விசயம் .அவர்கள் எப்போதும் தான் சொல்வதே சரி என்று வாதிடும்
வல்லமை பெற்றவர்களாய் மட்டும் இருப்பவர்கள். பிறரை முட்டாள் என்று கருதுபவர்கள்
என்றுமே ஒரு நல்ல அறிவாளியாக இருக்க முடியாது. அறிவாளிகளின் பண்பே தான் அறிந்த
ஒன்றைப் பிறரும் அறியும் வகையில் செயல்படுத்துவதே . ஒரு ஆசிரியர் அவர் இல்லை
என்றால் எமக்கு அறிவுக் கண்களை திறந்து வைப்பவர் யார்?...நாம் கற்றது , கேட்டது கண்களால்
கண்டுகொண்டவை இவைகள்தானே எம் அறிவின் மூலதனம்!!!..........
வழியே வாழ்வின் எல்லைகள் கடந்து இருந்த இடத்தில் இருந்து கொண்டே உலகத்தை
அளக்கும் சக்தி கொண்ட மா மனிதனே எம்மில் பெரியவன் .நாம் போற்றி மதிக்கப்பட
வேண்டியவன் அவன் எமக்கு அருளிய தத்துவங்களே அறிவிற்கு அத்திவாரம் . இதனை
பின்பற்ற மறந்தவர்கள் எவர்களாயினும் அவர்கள் வெறும் பதர்களே!!!...... நரிகளின்
ஊளையைக் கேட்டு அஞ்சி நடுங்கும் ஐந்தறிவு ஜீவனாக நாம் வாழ்வதும் எம் தவறே
ஆகும் . எப்போதும் எடுத்த காரியத்தில் தெளிவும் உறுதியும் இருத்தல் வேண்டும் .
விமர்சனங்களுக்கு பயந்தோ அல்லது சுயலாபம் கருதியோ பலருக்கும் நன்மை
பெயர்க்கும் செயலைக் கைவிடல் என்பது சிறந்த அறிவாளிகளுக்கு அழகல்ல .பலரும்
பாராட்டக்கூடிய ஒரு செயல் அதை எல்லோராலும் செய்து விட முடியாது .
இதற்க்கு எப்போதும் தடைக்கல் அதிகம் வந்து விழும் .அதையும் தாண்டி சாதிக்கும் வரை
மனிதன் ஒரு போதும் ஓயாமல் உழைக்க வேண்டும் .